தையல்கடை மீது விசமிகளின் தாக்குதல்!

Thursday, January 4th, 2018

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வீதியில் அமைந்துள்ள தையல் நிலையம் ஒன்று நேற்று நள்ளிரவு விசமிகளால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் முக்கிய வழக்கொன்றின் சந்தேக நபரது குடும்பமே தொடர்புபட்டிருப்பதாக கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

நல்லூர் கோவில் வீதியில் “2009 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்திலிருந்து தையல் நிலையம் வைத்துள்ளேன். அந்த இடத்திலிருந்து என்னை அகற்ற அயலவர்கள் பலதடவைகள் முயற்சிகளை முன்னெடுத்தனர். மின்சார சபைக்கு முறைப்பாடு செய்து எனது கடைக்கான மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் உரிய காரணங்களைக் கூறி மின் இணைப்பு மீளவும் வழங்கப்பட்டது.

மேலும் எனது கடையின் பூட்டை உடைத்த அயலவர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு உள்ளது. இந்த நிலையிலேயே அவர்கள் இந்த கீழ்த்தரமான செயலைச்செய்துள்ளனர்” என்று தையல் நிலைய உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts:

உர தட்டுப்பாடு நீக்கப்படும் - நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
கொரோனா இறப்புகள் இரண்டு அடிப்படையில் பதிவாகின்றன - 22 ஆவது கொரோனா மரணம் தொடர்பில் தொற்றுநோயியல் நிபு...
மட்டக்களப்பில் 24 மணித்தியாலயத்தில் 4 மரணங்கள் 64 பேருக்கு கொரோனா - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்ப...