யாழ்ப்பாண பொது நூல் நிலையம் புதுப்பொலிவுடன் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது அறிவுப்பொக்கிஷம்!
Sunday, June 1st, 2025
யாழ்ப்பாண பொதுநூலகம் எரியூட்டி அழிக்கப்பட்டதன் 44ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
1981ஆம் ஜூன் மாதம் முதலாம் திகதி அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் இன் தலைமையில் இந்நூலகம் எரியூட்டி அழிக்கப்பட்டிருந்தது
இந்நூலகத்தில் இருந்த 97,000 (97 ஆயிரம்) புத்தகங்கள் எரிந்து மட்டுமல்லாமல்ல பல அரிய ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களும் எரிந்து சாம்பராகி அழிந்திருந்தன.
மீண்டும் கிடைக்கப்பெறாத இந்த அரிய பொக்கிஷங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கியம் இன்றுவரை உள்ள கவலைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
காலமாற்றத்தில் இவ்வாறு எரியூட்டி அழிக்கப்பட்ட இந்நூலகத்தின் எச்சங்களை மீண்டும் புனரமைப்புச் செய்யாமல் அது அழிவுச்சின்னமாக இருக்கவேண்டும் என அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் வலியுறுத்தப்பட்டு வந்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இந்நிலையில் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்ட நூலகத்தை அழிவின் சின்னமாக இல்லாமல் அதை அறிவின் சின்னமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தீர்க்கதரிசனமான சிந்தனையின் அடிப்படையில் பல்வேறு சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து அதனை புதுப்பொலிவுடன் புனரமைக்க திட்டம் வகுத்தார்.
அவரது தீர்க்கதரிசனத்தின் விளைவாக 2000ம் ஆண்டு அன்று புனர்வாழ்வு அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் நன்கு திட்டமிடப்பட்டு சிறந்த முறையில் மீண்டும் புதுப்பொலிவுடன் யாழ். பொது நூலகம் புனரமைக்கப்பட்டு கணினி உட்பட பல்வேறு வசதி வாய்ப்புக்களுடனும் நவீன வசதிகளுடனும் 2003ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.
Related posts: