யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் – 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சூரியராஜா!
Tuesday, April 29th, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேசத்தில் 7 பேரும், கோப்பாய் பிரதேசத்தில் 5 பேரும், மருதங்கேணி பிரதேசத்தில் 4 பேரும், சாவகச்சேரியில் 3 பேரும் மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், நேற்று அட்டாம்பிட்டிய – நெலுவ, கிம்ப்ரோஸ் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த பகுதியில் உள்ள தேயிலை மடுவமொன்றில் வைத்து அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
000
Related posts:
20 ஆவது சட்டமூலம்: 6 ஆம் திகதி விசாரணை!
நாளை மின் தடை!
உறவுகளை வலுப்படுத்தி, இலங்கை தேசம் என்ற ரீதியில் உலகின் முன்னிலையில் புதிய வீரியத்துடன் உயர்ந்து நிற...
|
|
|


