எதிர்வரும் முதலாம் திகதிமுதல் கலைஞர்களின் படைப்புகளுக்கு கொடுப்பனவு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Friday, February 14th, 2020

கலைஞர்களின் படைப்புகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் .ன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.;

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் உடன்பாட்டு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்த அமைச்சல் இமற்கு அமைவாக வானொலிகளில் ஒலிபரப்பப்படும் ஒரு பாடலுக்கு 20 ரூபாவும், தொலைக்காட்சிகளில் ஒரு பாடலுக்கு 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் ஆரம்ப நிலை பதவிகளில் சேவையாற்றி இதுவரை பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் கீழ் கடந்த ஆறு வருட காலப்பகுதியில் எந்தவித பதவி உயர்வும் கிடைக்காத கான்ஸ்டபிள்களுக்கும், சாஜன்டன்களுக்கும், பொலிஸ் பரிசோதகர்களுக்கும் பதவி உயர்வு வழங்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்..

பாராளுமன்றத்தில் அண்மையில் முன் வைக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி பெறப்படவுள்ளது. அதன் பின்னர் நிகழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களுக்கும், வழங்குனர்களுக்கும் எஞ்சிய நிதி வழங்கப்படுமென அமைச்சர் கூறினார்.

 பொலிஸ் மா அதிபரும், சட்டமா அதிபரும் இரு அரச நிறுவனங்களின் பிரதானிகளாவர். ஆவர்களின் பிரச்சினைகளை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிடாது என்றும் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்..

Related posts: