யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி  – திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு பார்வையாளர்களை அழைக்கும் ஏற்பாட்டுக்குழு!

Monday, August 11th, 2025


………….
யாழ்ப்பாணம் சர்வதேச புத்தக கண்காட்சி எதிர்வரும் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது..

இது குறித்து யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தித்திய குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு மேலும் கூறுகையில் –

யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் குறித்த சர்வதேச புத்தகக் கண்காட்சி இரண்டாவது ஆண்டாக இவ்வருடமும் பிரமிக்கும் வகையில் பல் தேசிய நாடுகள் சார்பிலான புத்தகங்களை உள்ளடக்கிய வகையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

15 ஆம் திகதிமுதல் 17 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ள  கண்காட்சியில் 40 புத்தக கண்காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கம் அருகி வருவதனால், இளம் தலைமுறையினர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், சர்வதேச புத்தகங்களை இளம் சமுதாயத்தினரும், பாடசாலை மாணவர்களும் அறிந்துகொள்ளவும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே குறித்த கண்காட்சிக்கு பாடசாலை மாணவர்கள் ஆர்வலர்கள் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து பயன்பெற வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: