இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!
Thursday, September 9th, 2021
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 18 ஆயிரத்து 147 பேர் குணமடைந்து இன்று வியாழக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 780 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸினால் 10 ஆயிரத்து 689 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பட்டதாரிகளுள் ஒரு தொகுதியினருக்கு ஆசிரியர் நியமனம்? - இளைஞர் அலுவல்கள் அமைச்சர்!
பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட 20 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் !
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுமுதல் ஆரம்பம்!
|
|
|


