யாழில் வீசிய பலத்த காற்று –  மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதம்!

Friday, July 25th, 2025

யாழில் நேற்றுமுன்தினம் வீசிய பலத்த காற்று காரணமாக வீடு ஒன்றின் மீது தேக்கு மரம் முறிந்து விழுந்ததால் வீட்டின் கூரை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சோமஸ்கந்த கல்லூரி வளாகத்தில் காணப்பட்ட தேக்கு மரமானது அருகில் உள்ள வீட்டின் மீது முறிந்து விழுந்ததாலே இவ்வாறு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

000

Related posts: