முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளம் பயணம்!
Saturday, December 28th, 2024
அவர் தனது தனிப்பட்ட பயணமாக நேபாளம் வர உள்ளார் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கிருஸ்ண பிரசாத் தகால் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு தேவையான நெறிமுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் ரணில் விக்ரமசிங்க தமது பயணத்தின் ஒரு பகுதியாக லும்பினிக்கும் செல்லவுள்ளார். இதனையடுத்து ரணில் ஜனவரி முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கும் இறுதி மரியாதையை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள்!
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்த அதிகார சபை - ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு முந்நூற்று தொண்ணூற்று இரண்...
ஒரு இலட்சம் மணிநேரத்தை நிறைவுசெய்தது எயார்பஸ் - பிரான்ஸிடம் மீள ஒப்படைக்கிறது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ...
|
|
|


