அச்சமின்றிப் பரீட்சைகளில் தோற்றுங்கள் – யாழ் மாவட்ட மாணவர்களிடம் மாவட்டச் செயலர் கோரிக்கை!

Sunday, October 11th, 2020

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று நிலைமை சற்றுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது. நாளை ஆரம்பமாகும் பரீட்சைகள் யாழ்ப்பாணத்தில் இடையூறு இல்லாது நடப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

யாழ்ப்பாணத்தில் ஒருவர் மட்டுமே இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். மாணவர்கள் எந்தப் பீதியும் இன்றி சுகதார வழிகாட்டலின்படி பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியும்.

முடக்கப்பட்ட பகுதிகளில் இருப்போர் பரீட்சை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கு மாகாணகக் கல்வி அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை 464 குடும்பங்களைச் சேர்ந்த 994 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: