குடாநாட்டில் 741.615 ஹெக்டேயரில் புகையிலைச் செய்கை!

Monday, February 20th, 2017

குடாநாட்டில் 741.615 ஹெக்டேயரில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விவசாயப்பணி ப்பாளர் கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் மாவட்டத்தில்  உள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும்  741.615 ஹெக்டேயரில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்வரும் காலங்களில் புகையிலை செய்கையை தடைசெய்வதாக அரசாங்கம் அறிவித்த போதிலும் குறுகிய கால த்தில்  அதிக  வருவாய் ஈட்டுவதால் மக்கள் தொடர்ச்சியாக புகையிலை செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில்  104.69 ஹெக்டேயரிலும், வேலணையில் 92.85 ஹெக்டேயரிலும், நல்லூரில் 11.5 ஹெக்டேயரிலும், சங்கானையில் 25.1 ஹெக்டேயரிலும், சண்டிலிப்பாயில் 2.675 ஹெக்டேயரிலும், உடுவிலில் 102.5 ஹெக்டேயரிலும், தெல்லிப்பளையில் 3.75 ஹெக்டேயரிலும், கோப்பாயில் 35.7 ஹெக்டேயரிலும், கரவெட்டியில் 299.275 ஹெக்டே யரிலும், பருத்தித்துறையில் 39.425 ஹெக்டேயரிலும், சவாகச்சேரியில் 24.15 ஹெக்டேயரிலும் என மொத்தமாக 741.615 ஹெக்டேயர் நிலப்பரப்பில் புகையிலை பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

pok

Related posts:

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு முறைமை தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு புதிய ...
மாமடுவ மலையில் உள்ள வனப் பகுதி மறுபடியும் தீப்பிடித்து எரிந்துள்ளது - சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ...
வடமராட்சி, கரணவாய் பகுதியில் வாள்வெட்டு - பெண் உட்பட மூவர் காயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!