மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவில் இருந்து 7ஆயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படும் உதவித் தொகை!

Friday, July 25th, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களையும் எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமான பேர் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் இல்லாமல் ஒரு வளமான நாட்டை உருவாக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் அழகான வாழ்க்கையை அடைய, சமத்துவம் மற்றும் நியாயமான இடம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

000

Related posts: