ஊரியான் குளம் வாய்க்கால் புனரமைப்பு பணிகள் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஆரம்பம்!

Friday, July 14th, 2023

ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வள முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச ஊரியான் குளத்தின் கீழான முதலாவது வாய்க்கால் புனரமைப்புக்கான ஆரம்ப  நிகழ்வு  நேற்று13.07.2023 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் நேற்றையதின் ஆரம்பித்துவைத்தார்.

இத் திட்டத்தின் கீழ் 1600 மீற். வாய்க்கால் புனரமைக்கப்படவுள்ளதுடன் இதன் மூலமாக எதிர்காலத்தில் ஊரியான் குளத்தின் கீழ் சிறுபோக நெற் செய்கையாக 500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் செய்கையினை மேற்கொள்ளகூடியதாக இருக்கும்.

இப் பகுதி விவசாயிகள் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு  அமைவாக முன்னுரிமை அடிப்படையில் ஊரியான் குளம் புனரமைப்புக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், கண்டாவளை பிரதேச செயலாளர், விவசாய பிரதிப்பணிப்பாளர், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், ஊரியான் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அரச ஊழியர்கள், கமக்கார அமைப்பினர், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: