இரத்த மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது –  சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார!

Tuesday, July 25th, 2017

வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார சாட்சியமளித்துள்ளார்

அவர் தனது சாட்சியத்தில்,

நான் 1993ம் ஆண்டில் இருந்து 23 வருடங்களாக கடமையாற்றுகின்றேன். 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளேன்.

500க்கு மேற்பட்ட மரபணு அறிக்கைகளை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளேன். 100க்கு மேற்பட்ட மரபணு சாட்சியங்களை அளித்துள்ளேன்.

2015ம் ஆண்டு யூன் மாதம் 01ம் திகதிய கட்டளையின் பிரகாரம், 2015 யூன் மாதம் 03ம் திகதி வித்தியாவின் படுகொலை தொடர்பான சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றது.

இரண்டாவது தடவையாக 2015 யூன் 15ம் திகதிய கட்டளையின் பிரகாரம் 2015.06.16ம் திகதி கிடைக்கப்பெற்றது.

மூன்றாம் தடவையாக அரச சட்ட வைத்திய அதிகாரியின் சான்றுப் பொருட்கள் 2016.06.03ம் திகதி கிடைக்கப்பெற்றது. 36 சான்றுப் பொருட்கள் பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உரோம மாதிரிகள், 7வது சான்றுப் பொருள் சட்டை, 8வது கைக்குட்டை, 9வது சப்பாத்து, 10வது தலைப்பட்டி , 15வது ரிபன் ஒன்று, 16வது உள்ளாடை ஒன்று, 18வது தனிப்பட்டி ஒன்று, 19வது உள்பாவாடை, 20வது இடுப்பு பட்டி, 21வது மார்புக் கச்சை, 22வது காலுறை, 23வது இரத்த மாதிரிகள், 24வது ரிசேட், 25வது ரிசேட் ஒன்று, 26வது நீள காற்சட்டை, 27வது அரைக்காற்சட்டை, 28வது சேட் ஒன்று, 29வது நக மாதிரிகள், 30வது சொக்ஸ், 31வது இரத்த மாதிரிகள், 32வது இரத்த மாதிரிகள்,

33வது இரத்த மாதிரி இந்திரகுமார், 34வது இரத்த மாதிரி ஜெயக்குமார், 35வது இரத்த மாதிரி தவக்குமார், 36வது சசிதரன் இரத்தமாதிரி, 37வது இரத்தமாதிரி சந்திரகாந்தன், 38வது இரத்த மாதிரி உசாந்தன், 40வது இரத்த மாதிரி கோகுலன், 41வது இரத்த மாதிரி மகாலிங்கம் சசிக்குமார் போன்ற சான்றுப் பொருட்கள் பகுப்பாய்வு மேற்கொள்வதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மனித இரத்த மாதிரிகளை அடையாளம் காண முடிந்தது. விந்துக்களை அடையாளம் காண முடியவில்லை.

எஞ்சிய முடிகள் தொடர்பாக எமது விஞ்ஞான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குற்றப் புலனாய்வு பிரிவு பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

32வது இரத்த மாதிரியும், இறந்த பெண்ணின் இரத்த மாதிரியும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுகின்றது.

26வது சான்றுப் பொருளான நீளக்காற்சட்டை மீது காணப்பட்ட இரத்த மாதிரிகளும், பெண்ணின் யோனியில் காணப்பட்ட இரத்த மாதிரிகளும் இறந்த பெண்ணின் அல்ல என்றும் முடிவாகின்றது.

பாடசாலை சீருடை கிழிந்த நிலையிலும், சேறு படிந்த நிலையிலும் காணப்பட்டது என தெரிவித்தார்.

அதன்போது வித்தியாவின் பாடசாலை சீருடை சாட்சியிடம் காண்பிக்கப்பட்டது. சாட்சி வித்தியாவினது தான் என்பதனை உறுதிப்படுத்தினார்.

Related posts: