மாணவர்களை ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு!
Wednesday, April 9th, 2025
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 2025 ஆம் ஆண்டு, ஆறாம் தரத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை இணையவழி ஊடாக அனுப்பி வைக்க முடியும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி விண்ணப்பங்களை http://g6application.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
அத்துடன் அதிகபட்சமாக 3 பாடசாலைகளுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் தொடர்பான வழிகாட்டுதல்களைக் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் பெற்றுக்கொள்ள முடியும்
000
Related posts:
30 சட்டத்தரணிகளை புதிதாக சேவையில் இணைக்க முயற்சி!
ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்!
10 மணிநேர மின் துண்டிப்பு - இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளிப்பு!
|
|
|


