மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை!
Thursday, June 26th, 2025
வட மாகாண பாடசாலகளுக்கிடையே வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மல்யுத்தம், யூடோ, தைகொண்டே போட்டிகளில் துணுக்காய் விநாயகபுரம் அ.த.க பாடசாலை 30 பதக்கங்களை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இம்மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடைபெற்றன.
வடமாகாணமட்ட மல்யுத்தம், ஜுடோ, தைகொண்டே போட்டிகளில் இப்பாடசாலையைச் சேர்ந்த 22 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இதில் இப் பாடசாலை அணி மொத்தமாக 30 பதக்கங்களை பெற்று வரலாற்று சாதனையை பதிவு செய்தது.
இதில் பங்குபற்றியோர் 11 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் உட்பட 30 பதக்கங்களை பெற்று பாடசாலைக்கும் துணுக்காய் வலயத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்கள்.
அத்தோடு பெண்கள் அணியினர் மல்யுத்தப் போட்டியில் மாகாண சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வருடமும் இப்பாடசாலை 18 பதங்கங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


