மரம் முறிந்து விழ்ந்ததால் வீடு பாரிய சேதம் – குப்பிளானின் சம்பவம்!

Friday, September 26th, 2025


…..
யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் நேற்றையதினம்
வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழ்ந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
000

Related posts: