கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு!
Friday, November 22nd, 2024
கல்வித்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மீளாய்வு செய்ய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி துறைசார் நிறுவனங்களால் அண்மைக்காலமாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பல்வேறு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையை எட்டவில்லை. இந்த முன்மொழிவுகள் மற்றும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்த பின்னர், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவு முன்வைக்கப்படும் என்று செயலாளர் மேலும் கூறியுள்ளார்.
000
Related posts:
புதிய பல சட்டங்கள் அடுத்த வருடம் நாடாளுமன்றத்தில் – பிரதமர்!
புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது- நடவடிக்கை எடுக்க தயங்கவும் மாட்டோம் - ...
கிளிநொச்சிக்கு பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் விஜயம் !
|
|
|


