கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 240 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!
Friday, May 8th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை 240ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இன்றையதினமும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 8 பேர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இதுவரை 824 பேர் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தற்போது வைத்தியசாலையில் 575 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், நோய்த் தொற்று சந்தேகத்தில் 135 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலையில் உள்ள அதேவேளை 9 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
Related posts:
பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களுக்கு சான்றுபெற்ற பாடசாலையில் தொழிற்பயிற்சி!
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கை இன்று !
சீன அதிபரின் கருத்துக்கு முகத்திற்கு நேராக மறுத்த ட்ரம்ப்!
|
|
|


