மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்  விசேட கலந்துரையாடல்!  

Saturday, February 22nd, 2025

மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (22.02.2025) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர்கள்  மற்றும் முக்கியஸ்தர்கள்  செயற்பாட்டாளர்கள் பிரசன்னத்துடன் இன்றையதினம்  (22.2.2025) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலின் பின்னரான மன்னார் மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் தேர்தல் பின்னடைவுகள் குறித்த அக, புற காரணிகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் பின்னடைவிலிருந்து கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கான ஏது நிலைகள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்படமை குறிப்பிடத்தக்கது

000.

Related posts:


எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...
வீதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் உயிரிழப்புக்கு ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே காரணம்...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு – கல்வி அமைச்சு அறி...