மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராகபேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பதவியைற்பு  –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Sunday, February 23rd, 2025

மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக பதவி ஏற்கும் பேரருட்திரு அந்தோணிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் பதவியைற்பு நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு ஆயருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்  .

மன்னார் மறை மாவட்டத்தின் 4 ஆவது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் நேற்றையதினம் ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணின் மைந்தரான பேரருட்திரு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு  செய்யும் நிகழ்வு  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்நிகழ்வில் கலந்து காண்டு சிறப்பித்து ஆண்டகைக்க தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த  அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி  பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை, மற்றும்  இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பல நூற்றுக்கணக்கான அருட்தந்யைர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், வடமாகாண ஆளுனர், நீதிபதிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதி நிதிகள், இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள் உள்ளடங்களாக பல ஆயிரக்கணக்கான மக்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேநேரம் மன்னார் மறைமாவட்டத்தின் 4 ஆவது ஆயராக மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டார். பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது. அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயராக உள்ள மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: