மட்டு – விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடபவனி!…….

Saturday, October 4th, 2025


மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா நேற்று பாற்குட பவனியுடன் ஆரம்பமானது.

நேற்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து விஷேட பூஜைகளுடன் ஆரம்பமான பாற்குடபவணியானது பிரதான வீதியின் ஊடாக ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசில் பாற்குடங்களை சுமந்துவந்து அன்னை ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.

பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அன்னை ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு விஷேட பூஜைகளும் இடம்பெற்றிருந்தது.

மூலவர் கர்ப்ப கிரகத்திலே இலங்கையில் முதல் முறையாக ஆறு அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் விக்ரகம் அமையப்பெற்ற சிறப்பினை கொண்ட விளாவட்டவான் ஸ்ரீ விரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் (07.10.2025) 7ஆம் திகதி அதிகாலை திருப்பள்ளையம் மற்றும் தீ மிதிப்புடன் இனிதே நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: