மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி.பெர்னாண்டோ பதவியேற்பு!
Tuesday, November 19th, 2024
மக்கள் வங்கியின் புதிய தலைவராக பேராசிரியர் பீ.என்.டி. பெர்னாண்டோ, 2024 நவம்பர் 18 நேற்று, மக்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
பேராசிரியர் பெர்னாண்டோ நிதி, வங்கியியல் மற்றும் உயர் கல்வி ஆகிய துறைகளில்,25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். கல்விமானாக அவர் கணிசமான பங்களிப்புக்களை ஆற்றியுள்ளதுடன், களனி பல்கலைக்கழகத்தில் நிதியியல் கற்கைப்பிரிவில் பேராசிரியராகவும், அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஆசிரியப் பணியில் 27 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட மகத்தான அனுபவத்துடன், கல்வித்துறையில் ஆற்றியுள்ள முன்னோடிப் பணிகளுக்காக பேராசிரியர் பெர்னாண்டோ அவர்கள் நன்மதிப்பை சம்பாதித்துள்ள அதேசமயம், பல்வேறு புத்தாக்கமான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை அவர் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் நிதித்துறைக் கல்வியின் தராதரங்களை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
மேற்கு வங்காள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆடீயு பட்டத்தையும் பெற்றுள்ள அவர், களனி பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ (கணக்கியல்) பட்டதாரியும் ஆவார்.
கொழும்பு பங்குச் சந்தை, இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு போன்ற இலங்கையிலுள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும், வளவாளராகவும் பேராசிரியர் பெர்னாண்டோ சேவையாற்றியுள்ளார்.
இந்நிலையில் வலுவான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் நிலைபேறு கொண்ட வங்கி வலையமைப்பாக மக்கள் வங்கியைத் திகழச் செய்வது குறித்த தனது இலக்கினையும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிபபிடத்தக்கது
00
Related posts:
|
|
|


