மக்களுக்கு தொடர் தொல்லையாக இருக்கும் கட்டாக்காலிகளுக்கு நடவடிக்கை வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா வலியுறுத்து!

…………
பெரும்போக செய்கைக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நாளாந்தம் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்திவரும் வேலணை பிரதேச ஆளுகைக்குட்பட்ட தெருவோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் கட்டாக்காலியாக திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை நடைமுறைப்படுத்துவது அவசியம் என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (15) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பிரதேசத்தின் பல்வேறு விடையங்கள் குறித்து சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு அவற்றுள் பல நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்டாக்காலி விலங்குகளை கட்டுப்படுத்தும் முன்மொழிவை சபையில் சமர்ப்பித்து கருத்துக் கூறுகையில் இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில் –
தற்போது பருவகால மழையுடன், பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் கட்டாக்கலிகளை கடுப்படுத்தும் செயற்பாடுகளை ஒவ்வொரு பிரதேச சபைகளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.
அதன் அடிப்படையில் எமது சபையும் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்து கட்டாக்காலிகளால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவது அவசியம்.
இதேநேரம் கால்நடை வரையறைக்குள் கறவை மாடுகளை சுயதொழில் முயற்சியாக பலர் குறிப்பாக பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அதுமடுமல்லாது எவரது பராமரிப்பும் இன்றி திரியும் மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களும் அதிகளவில் தமது உணவு மற்றும் ஒதுங்கி நிற்கும் தேவைக்காக பரவலாக திரிகின்றன.
இவ்வாறான நிலையில் அனைவரது ஒத்துளைப்பும் இன்றி இந்த கட்டாக்காலிகளை
கட்டுப்படுத்துவதென்பதும் சவாலான விடையம்.
இவ்வாறு இந்தக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதனூடாக விவசாயப் பயிர்கள், விபத்துகளைக் குறைத்தல், பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாத்தல், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றுடன் விலங்குகளின் நலனையும் உறுதி செய்ய முடியும்.
இதேவேளை நகர் மற்றும் வீதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளைச் சரியாக அப்புறப்படுத்துவதன் மூலம், உணவு தேடி கால்நடைகள் வீதிகளுக்கு வருவதைக் குறைக்க முடியும் என நம்புகின்றேன்.
எனவே குறித்த விடையத்தை தேவையின் அவசியம் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
குறித்த முன்மொழிவு சபையில் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சபை உறுப்பினர்களான, கருணாகரன் நாவலன், சுவாமினாதன் பிரகலாதன், கனகையா செல்லப்பா பார்த்தீபன்,
பொன்னம்பலம் நடனசிகாமணி,
சிவகடாச்சன் செந்தூரன், ஆனந்தராசா சதீஸ்குமார், ஞானப்பிரகாசம் ஞானரூபன், லோகேந்திரன் இதயதீபன்,
செல்வக்குமார் திருக்கேதீஸ்வரன், ஆகியோர் தமது வாதங்களை முன்வைத்து கூறும்போது –
கால்நடைகளை அவிழ்த்து விடுவதால் ஏற்படும் அபாயங்கள், விபத்துக்கள் மற்றும் அதன் விளைவுகள் அதிகமானது.
இது குறித்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.
அத்துடன் இந்த பிரச்சினையை நேரடியாகத் தீர்க்க உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் பொதுமக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது.
இதேநேரம் வளர்ப்பு மாடுகளை உரிமையாளர்கள் கட்டி வளர்ப்பது அவசியமாகும்.
அதனடிப்படையில் பொது இடங்களில் அலைந்து திரியும் கட்டாக்காலிகள் மற்றும் பிற விலங்குகளைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதுமட்டுமன்றி கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, கருத்தடை செய்யும் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும்.
அத்துடன் சபையின் அறிவுறுத்தல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை, மீறிச் செயற்படும் நபர்களது கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|