மகேஸ்வனை கொலை விவகாரம் – டக்ளஸை தொடர்பு கொண்ட துவாரகேஸ்ரன்.

Thursday, October 10th, 2024


ஈ.பி.டி.பி. மீதான அரசியல் பயம் காரணமாகவே சக தமிழ் தரப்புக்களினால் ஈ.பி.டி.பி. மீது சேறுபூசப்படுவதாக தெரிவித்த தோழர் டக்ளஸ் தேவானந்தா, மகேஸ்வரன் கொலை தொடர்பாக அவரது சகோதரன் துவாரகேஸ்வரன் அண்மையில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்திய கருத்துக்களையும் சுட்டிக்காடடினார்.

காரைநகரில் இன்று நடைபெற்ற ஈ.பி.டி.பி. கட்சியின் வட்டார உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலிலேயே ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் மேற்குறித்த விடயத்தினை பதிவு செய்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த மகேஸ்வரனின் சகோதரன் துவாரகேஸ்வரன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றிற்காக ஊடகவியலாளர்களுடன் நிற்பதாகவும், எம்மை (பற்றிய உண்மையை வெளிப்படுத்தி) வரலாற்றில் இருந்து விடுவிக்க இருப்தாகவும் தெரிவித்தார்.
துவாரகேஸ்வரன் என்ன விடயத்தினை பூடகமாக சொல்கிறார் என்பதை புரிந்து கொண்ட போதிலும் , எதுதொடர்பாக சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
தனது சகோதரர் மகேஸ்வரனின் உண்மையான கொலையாளிகள் யார் என்பது தொடர்பாக வெளிப்படுத்த இருப்பதாகவும், தமது அண்ணியார் அரசியலுக்காக ஈ.பி.டி.பி. மீது குற்றஞ்சாட்டி வருவதை வெளிப்படுத்த இருப்பதாவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்” என்று செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதுபோன்றே ஈ.பி.டி.பி. மீதான பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற அரசியல் ரீதியானவை என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  கட்சியின் சரியான வேலைத் திட்டங்களும் தெளிவான வழிமுறைகளும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டு நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்கள் ஈ.பி.டி.பி. கட்சியை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.

Related posts:


சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலி...
வடக்கில் கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலை மேற்கொள்ள வழிசமைத்துக் கொடுத்தவர்கள் நாம் - பாஷையூரில...
சீனப் போர் வெற்றியின் 80 ஆவது ஆண்டு நிறைவு - சீன மக்களுக்கு தமிழ்  மக்கள் சார்பில் டக்ளஸ் தேவானந்தா ...