பொதுவான நினைவு கூரலுக்கென்றால் ஈ.பி.டி.பி ஆதரிக்கும்  –  முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி

Tuesday, October 14th, 2025


………
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து இயக்கங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில்  நினைவு கூருவதற்கு பொதுவான இடம் ஒதுக்கப்படுமானால் அதற்கு ஈ.பி.டி.பி ஆதரவு கொடுக்கும்.

ஆனால் அது ஒரு தரப்பினரை மட்டும் நினைவுகூரும்  இடமாக அமையுமாக இருந்தால் எமது கட்சியின் நிலைப்பாட்டுக்கு இணங்க எமது ஆதரவு இருக்கப்போவதில்லை என்று யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்றபோது முதல்வர் மதிவதனியால் நல்லூர் கோயிலின் மேற்கு வீதியில் உள்ள நிலப்பரப்பை புலிகளின் சார்பான நினைவேந்தல்களை நடத்த பலர் குத்தகைக்கு எடுக்க கோருவதாகவும், இதனால் முரண்பாடுகள் ஏற்படுவதால், அதை தவிர்க்க யாழ் மாநகரசபையின் உறுப்பினர்கள் அக்காணியை குத்தகை அடிப்படையில் எடுத்து அவ் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவொன்றை சபையில் பிரஸ்தாபித்திருந்தார்.

குறித்த முன்மொழிவு குறித்து சபையில் இவ்வாறு கருத்து தெரிவுத்த அவர் மேலும் கூறுகையில் –

நினைவு கூரும் இடம் என்பது படுகொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பா காலத்திலிருந்து இறுதி யுத்தம் நடைபெற்ற காலம்வரை இறந்த அனைவரையும் நினைவு கூருவதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு நினைவு கூரலுக்கான பொதுச் சதுக்கமாக அது இருக்குமானால். எமது ஆதரவு இந்த முன்மொழிவுக்கு இருக்கும்.

மாறாக தனிப்பட்ட ஒரு  அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கான இடத்துக்கு எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடு என்றும் இணங்கிச் செல்லாது.

எமது இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால் நாம் அது தொடர்பான விவாதத்தில் தொடர்ந்தும் இருக்கின்றோம். இல்லையேல் எமது கட்சி அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்காது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் இருந்து வெளிநடப்பு செய்யும் என்று தெரிவித்ததுடன் அசையில் இருந்து ஈ.பி.டி.பியின் 4 உறுபினர்களும் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 8 ஆம் திகதியன்று
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
பொதுத் தூபி ஒன்றை இறுதியுத்தம் நடைபெற்றிருந்த பகுதியில் பொருத்தமான ஓர் இடத்தில் அமைப்பற்கும், அதற்கென ஒரு திகதியைக் குறித்தொதுக்குவதற்கும்நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்றும் இதனை  அரசு மேற்கொள்ளுமிடத்து, அரசுமீது எமது மக்களின் நம்பிக்கைகள் வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை. என்றும் தனிநபர் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேறச் செய்திருந்தார்

இன்நிலையில்
பொதுவான நினைவு நாளொன்றை பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் இணங்கியிருந்தது.

அத்துடன்  ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்த தனி நபர் பிரேரணையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன சபையில் அறிவித்திருந்தார்.

குறிப்பாக யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூருவதற்கு பொதுவான தூபியொன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக பொதுவான நாளொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது தனிநபர் பிரேரணையில் கோரியிருந்தார்.

இப்பிரேரணை மீதான விவாதத்தில் அரசாங்கம் சார்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பதிலளித்தார். இந்தப் பிரேரணையை ஏற்றுக் கொள்வதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. யுத்தத்தில் உயிரிழந்த சகலரையும் நினைவுகூருவது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்திருந்தார்

அத்துடன் குறிப்பிட்டதொருவருக்கானதாக இல்லாமல் யுத்தத்தில் உயிரிழந்த சகலரும் நினைவுகூரப்பட வேண்டும். இந்தப் பிரேரணையை பாதுகாப்பு அமைச்சு முழு மனதுடன் ஆதரிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: