பெப்ரவரி 12 க்கு முன் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும்!
Friday, January 10th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 ௲ 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி புதன்கிழமை (8) 64 நிலையங்களில் தொடங்கியது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது.
சிங்கள மொழி மூலம் 244,092 பேரும் தமிழ் மொழி மூலம் 79,787 பேரும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றனர்.
00
Related posts:
தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்...
காரணம் சொல்லும் பிரதமர் : அதிருப்தியில் மக்கள்!
|
|
|


