பெண்களுலள் தொடர்பில் விரைவில் வரும் சட்டம்!
Wednesday, November 19th, 2025
கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் சம்பளத்தை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் (ஊழியர் மற்றும் பணிக்கொடை முறைப்படுத்தல்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் இல. 03 இனைத் திருத்தம் செய்வதற்காக 2025.07.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் மூலம் தங்குமிட வசதிகளுடன் கூடிய தனங்கள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் உணவுப் பானங்களைப் பரிமாறும் பெண் ஊழியர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு மாலை 6.00 மணிக்குப் பின்னர் மற்றும் காலை 6.00 மணிக்கும் முன்னர் பணியாற்றுவதற்கு இடமளிக்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த பணிகளுக்காக கடை மற்றும் காரியாலய ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் பணிக்கொடையை முறைப்படுத்தல்) சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் அமைச்சரால் ஆக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகள் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0000
Related posts:
|
|
|


