பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ. நா. குழுவில் இலங்கை முதலிடம்!
Monday, June 29th, 2026
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கான குழுவில் (CEDAW) உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், இலங்கை 144 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
இலங்கைக்கு அடுத்ததாக எகிப்து (141), உகாண்டா (140), மங்கோலியா (136), கனடா (135), எஸ்தோனியா மற்றும் அஸர்பைஜான் (தலா 133), கியூபா (128), ஸ்பெயின் (125), மெக்சிகோ (119) மற்றும் அன்டிகுவா மற்றும் பார்புடா (118) ஆகிய நாடுகளும் வெற்றி பெற்றுள்ளன.
எனினும், மொசாம்பிக், காபோன், தென்னாப்பிரிக்கா, புர்கினா பாசோ, நைஜர், பெனின், நமீபியா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகள் போதிய வாக்குகள் இன்றி வெற்றி வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கையைச் செயல்படுத்துவதையும், உலகளவில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதையும், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் குழு கண்காணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


