பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்யுங்கள் – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமை அலுவலகம் உத்தரவு!

Monday, October 18th, 2021

பாடசாலைகள் ஆரம்பமாவதை உறுதி செய்வதற்கு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் ( OIC ) தமது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும், அதிபர்களை சந்தித்த பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதைத் தடுப்பவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேநேரம் பொலிஸ் பிரிவில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளை அடையாளம் காண்பது, பாடசாலைகள் திறப்பது தொடர்பில் அதிபர்களை சந்திப்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகை தரும் பகுதிகள் பற்றிய தகவல்களைப் பெறுவது ஆகியவற்றையும் செயற்படுத்துமாறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக ஆளுநரால் அறிவிப்பு!
சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண...
சிவராத்திரி விரத புண்ணியகாலத்தில் ஆன்மீக செயற்பாடுகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் பணிப்புரைக...