புலிகளிடம் பயிற்சி பெற்ற மாவோயிஸ்டு சுட்டுக்கொலை – இந்திய ஊடகங்கள் தகவல்!
Wednesday, May 28th, 2025
சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் பசவராஜு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பசவராஜு உள்ளிட்ட ஆறு பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்காது, பாதுகாப்பு படையினரே அடக்கம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பசவராஜு, தமிழீழ விடுதலை புலிகளிடம் பயிற்சி பெற்ற திறமை மிக்க வலிமையான தலைவராக விளங்கியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் கூர்மையான திட்டமிடல், தாக்கும் திறன் மற்றும் பயிற்சி அளித்து படைகளை மேம்படுத்தியமை மாவோயிஸ்டு அமைப்புக்கு பெரும் வலிமையாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை பிடிக்க கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டிருந்த நிலையில், பசவராஜு உள்ளிட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசவராஜுன் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஒரு முக்கிய தளபதி உட்பட ஆறு பேர் சரணடைந்ததாகவும், இதுவே பசவராஜுவை தாக்க பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தாகவும் கூறப்படுகின்றது.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்ட பாதுகாப்பு படையினர் துல்லிய தாக்குதல் நடத்தி பசவராஜு உள்ளிட்ட 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் பசவராஜு உள்ளிட்ட 7 பேர் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் உடல்களை அடக்கம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பசவராஜு பிடிக்கப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. எனினும், இதனை பொலிஸார் முற்றிலும் மறுத்துள்ளனர்
000
Related posts:
|
|
|


