புடினை தொலைபேசியில் அழைத்த ட்ரம்ப் – உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என புடின் தரிவிப்பு!
Friday, July 4th, 2025
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரம் நீடித்த தொலைபேசி அழைப்பொன்றில் ட்ரம்புடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, போரை முடிவுக்கு கொண்டு வருமாறு ட்ரம்ப் கூறிய போதும் புடின் அதனை மறுத்துள்ளார்.
அத்துடன், உக்ரைன் தனது நேட்டோ திட்டங்களைக் கைவிட முடிவெடுத்தால் ரஷ்யா போர்நிறுத்தம் குறித்து சிந்திக்கும் எனவும் புடின் கூறியுள்ளார்.
மேலும், சில உக்ரைன் நிலங்களின் மீது ரஷ்யாவின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளலும் புடினின் விதிகளில் அடங்கும்.
இதேவேளை, முக்கியமான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் உட்பட சில இராணுவப் பொருட்களை உக்ரைனுக்கு அனுப்புவதை அமெரிக்கா தாமதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தியின் மரணம் - 3 பேருக்கு 125 ஆண்டு சிறை!
வாகன இறக்குமதிக்கு தடை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட இறக்குமதியாளர்கள் தீர்மானம்!
யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை!
|
|
|


