பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

Tuesday, June 24th, 2025

பிலிப்பைன்ஸில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 9:59 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி டாவோ மாகாணத்தின் பாகுலினில் இருந்து சுமார் 374 கிலோமீட்டர் தொலைவிலும், டாவோ நகரத்திலிருந்து 483 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை

000

Related posts: