பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுகின்றது – சஜித்!

பாடப்புத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுகின்றது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அமெரிக்காவின் புதிய வரியினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள தாக்கங்கள் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், பாடபுத்தக அனுபவத்தைக் கொண்ட நிபுணர்களை, பேச்சுவார்த்தைக்குப் பயன்படுத்துவதன் எதிர்மறையான விளைவுகளை அமெரிக்காவின் வரி திருத்தம் எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆடை உற்பத்தி தொழிற்துறையைப் பொறுத்தவரையில், 60 சதவீதமானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தநிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் 30 முதல் 40 சதவீதத்தால் குறைவடையுமெனக் கருதப்படுகிறது.
அதேபோன்று இறப்பர் தொழிற்துறையும் இவ்வாறான நட்டத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஏற்றுமதி துறையினை பாதுகாப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குத் தாம் தயாரெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
00
Related posts:
|
|