சுயநலமற்ற மக்கள் நேசிப்பை டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து ஏனைய தமிழ் தலைமகள் கற்றுக்கொள்ள வேண்டும் – தீவக மக்கள் சுட்டிக்காட்டு!

Monday, July 4th, 2016

சாதாரண மக்களது அடிப்படை தேவைகள் முதற்கொண்டு மக்களது உரிமைகள் அபிவிருத்தி தேவைகள் வரையான அனைத்தையும் நிகழ்கால அரசியல் நீரோட்டத்திற்கமைய ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி அதனூடாக கிடைக்கக்கூடியவற்றை மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததுடன் தமிழ் மக்களது எதிர்கால தேவைகளை நன்கறிந்து மக்களை வழிநடத்தும் ஆற்றல் கொண்டவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே. அவரது மக்கள் நேசிப்பையும் சுயநலமற்ற அர்ப்பணிப்கபுளையும் மற்றைய தமிழ் அரசியல் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என தீவகப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்றையதினம் (03) தீவகப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்திப்பின்போதே குறித்த விடயத்தை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களது கடந்தகால வரலாற்றை புரட்டிப்பார்க்கும்போது மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்த அரசியல் தலைவர்கள் யாரும் டக்ளஸ் தேவானந்தாவைபோன்று நியமாக வாழ்ந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது சுயநலன்களை மையப்படுத்தியே வாழ்ந்து சென்றிருக்கின்றார்கள். ஆனால் மக்களை மையப்படுத்தி மக்களது உரிமைகள் தேவைகளுக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றிகொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா என்பதை யாரலும் மறுக்க முடியாது.

இதன் வெளிப்பாடுகள் தான் எத்தகைய எதிர்ப்பலைகள் கிழம்பியபோதெல்லாம் அவரை நாம் தமது மக்கள் பிரதிநிதியாக இன்றுவரை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பப்பி வருகின்றோம்.

நாட்டின் ஆட்சிகள் மாறலாம் அதிகாரங்கள் மாறலாம் ஆனால் எமது வாழ்வியல் மாறவேண்டுமானால் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்கள் பலப்படவேண்டும். அதனூடாகவே எமது வாழ்வியலில் மாற்றங்களை பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது தீவக குதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பிரதேசத்தின் எதிர்கால் அரசியல் மற்றும் அபிவிருத்தி விடயங்களை மேற்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் யாழ் மாவட் நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) உள்ளிட்ட யாழ்.மாவட்ட நிர்வாக குழுவினரும் கலந்துகொண்டனர்.

 13524542_156252628111822_906406553167072382_n

13495203_156252708111814_7013686757827337611_n

Related posts: