பல்வேறு திருட்டு சம்பவங்கள் –  சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது!  

Friday, July 25th, 2025

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடியில் கடை ஒன்றினை உடைத்து 6 இலட்சம் ரூபா காசு, கேமரா சேமிப்பகம் என்பவற்றை திருடியமை, யாழில் கருவாட்டுக்கடை ஒன்றினை உடைத்து அங்கு திருடியமை, சாவகச்சேரியில் தொலைபேசி கடை ஒன்றினை உடைத்து 96 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் 2 கைபேசிகளை குறித்த சந்தேகநபர் திருடியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இயங்கும், உப பொலிஸ் பரிசோதகர் திரு.மயூரன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது திருடப்பட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டன

விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

00

Related posts:


அன்பளிப்பு பொருள்கள் பெறுவதை அரச ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் - இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழ...
வர்த்தகர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பாரிய சலுகைகள் வழங்கப்பட்டள்ளன - அமைச்சர் மஹிந்த அமர...
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை - சட்டமா அதிபர் திணைக்...