பறிக்கப்படும் தொழில் உரிமைகளை மீட்க வீதிக்கிறங்கும் பொருகாதார உத்தியோகத்தர்கள் – 26 அன்று மாபெரும் ஒன்றுகூடலுக்கும் அழைப்பு

Sunday, March 22nd, 2026

!
…….
“பிரஜா சக்தி” உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நோக்கி உருவெடுத்து வரும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எதிர்வரும் 26 ஆம் திகதியன்று
கொழும்பு பொது நூலகத்தில் ஒன்றுகூடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்கதாக அரச மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) ஊடக சந்திப்பை முன்னெடுத்து இவ்வாறு கூறிய அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கௌரவமான ஒரு தொழில்முறை அங்கீகாரத்திற்காக, நாம் போராடுகின்றோம்.

இதேநேரம் எமது கோரிக்கைகளும் உரிமைகளும் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ அதிகாரத்தைப் பிடிப்பதற்கான உத்திகளாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் நாம் அவதானமாக இருக்கின்றோம்.

வரலாற்றுப் பாதையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பின்வாங்க முடியாத ஒரு பாரிய சக்தியாக மீளுருவாக்கம் பெற்று வரும் நிலையில் தற்போது, அரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒரு தீர்மானமிக்க காரணியாக மாறியுள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இல்லாத அரச சேவை பற்றி கலந்துரையாடவே முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.

ஆற்றுகின்ற பணி மற்றும் வகிக்கின்ற பொறுப்பின் அடிப்படையில் நிலைமை அவ்வாறிருந்த போதிலும், அந்தஸ்தைப் பொறுத்தவரை அரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எவ்வித மதிப்பும் இல்லாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 13 வருடங்களாகக் கல்வித் தகைமைக்கேற்ற சம்பளத் திட்டம் இன்றி, பதவியுயர்வு நடைமுறைகள் இன்றி, விஞ்ஞானபூர்வமற்ற ஒரு சேவைப் பிரமாணக் குறிப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையை நாம் அனைவரும் நன்கு அறிவோம். எனவே, அனைத்து விதமான வாதப் பிரதிவாதங்களையும் கொள்கை வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு, நாம் அனைவரும் ஓரிடத்தில் ஒன்றாக இணைய வேண்டியகாலச் சூழலி உருவாகியுள்ளாது.

மத்திய அரச சேவையிலோ அல்லது மாகாண அரச சேவையிலோ எந்தப் பிரிவில் பணிபுரிந்தாலும், “அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்” எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டு, ஒரு பொதுவான இலக்கை நோக்கி அணிதிரள வேண்டியதும், தொழில்சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராட வேண்டியதுமான தேவையானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று மிக வலுவாக உணரப்படுகின்றது.

கடந்த 26 வருடங்களாகக் குவிந்து கிடக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள், சில அரசியல் கட்சிகளுக்கு வெறும் கோசங்களாகவும், தொழிற்சங்கத் தலைவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான ஒரு அதிஷ்ட லாபச் சீட்டாகவும் மட்டுமே இருந்துள்ளன.

எனவே, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அரச சேவைக்குள் இனிமேலும் அநாதைகளாக்கப்படக் கூடாது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை எமக்கு உண்டு. அதற்கமைய எமது உரிமைகளையும் கௌரவத்தையுன் வெற்றிகொள்ள நாம் போராட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: