விசேட நீதிமன்றத்தை விரைவில் அமையுங்கள்!

Sunday, October 1st, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்பதாக ஜே.வி. பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விசேட நீதிமன்றத்தை அமைக்கவிருப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் அந்த உறுதிமொழியை ஜனாதிபதி விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். வித்தியாவின் குடும்பத்திற்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பலரும் பாடுபட்டுள்ளனர். இதனை போன்று பாதிக்கப்படும் பலருக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இலங்கையில் நாளொன்றுக்கு 13 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படு கின்றார்கள்.  இவர்களில் ஓர் இருவர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.வித்தியா படுகொலை செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு விசேட நீதிமன்றை அமைக்கவிருப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த உறுதிமொழியை ஜனாதிபதி விரைவில் நிறைவேற்ற வேண்டும். நீதிஅமைச்சராக பெண் ஒருவர் பதவியேற்றுள்ள நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் உன அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: