பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு!
Sunday, November 16th, 2025
…….
இலங்கை பரீட்சைகள் திணைக்களம், 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.
குறித்த அட்டவணையின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26 வரை நடைபெறும்.
2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதியும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5 வரையிலும் இடம்பெறும்.
அத்துடன், 2027ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப (ஜி.ஐ.டி) பரீட்சை ஒக்டோபர் 24, 2026ஆம் அன்று நடத்தப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் டிசெம்பர் 17 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
வலி.வடக்கு மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி பூரண ஆதரவு!
தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது - கட்சியின் சர்வதேச அமைப்பாளர் ...
பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது!
|
|
|


