பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, May 14th, 2025

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் உறுப்பினர்களை பெயரிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் இந்த பட்டியல் உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு அறிவித்துள்ளது.

கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் உறுப்பினர்களை பெயரிடும் போது பெண் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றதும், ஏற்கனவே தேர்தலில் வட்டாரங்களில் வெற்றியீட்டிய வேட்பாளர்களின் பெயர்களுடன் இணைத்து வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்கள் நிறுவும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:

வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் - கஃபே அமைப்பு சுட்டிக்...
நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு - அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான நட்டஈட்டுக்கு வழங்கப்பட்ட கப்பம் - விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்...