பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்!
Saturday, June 14th, 2025
பங்களாதேஷ் கிரிக்கெட் தற்போது ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. நஜ்முல் ஹொசைன் சாண்டோவுக்குப் பதிலாக மெஹிடி ஹசன் மிராஸ் ஒருநாள் அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வருட அனுபவத்திற்குப் பின்னர், மெஹிடி அணியை ஒரு புதிய அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராக உள்ளார்.
கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் 27 வயதான மெஹிடி ஹசன் மிராஸ் நல்ல செயல்திறன்களை வெளிப்படுத்தியதால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருடன் அவர் பங்களாதேஷ் அணியை வழி நடத்துவார்.
2027 உலகக் கிண்ணம் நெருங்கி வருவதால், மெஹிடியின் தலைமையில் மீண்டும் களமிறங்க பங்களாதேஷுக்கு இந்த ஒருநாள் தொடர் மிகவும் முக்கியமானது.
இந்த நிலையில் புதிய பொறுப்பை ஏற்றுள்ள மெஹிடி ஹசன் மிராஸ், அணியை நிலைப்படுத்தி மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது என்றும் கூறினார்.
000ஷ
Related posts:
|
|
|


