தென்ஆப்பிரிக்காவிற்கு 295 ரன்கள் வெற்றி் இலக்காக நிர்ணயித்தது ஆஸி!

Friday, September 30th, 2016
தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. செஞ்சூரியனில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் வார்னர், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 36 பந்தில் 40 ரன்னும், பிஞ்ச் 28 பந்தில் 33 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த பெய்லி 74 ரன்னும், மார்ஷ் 31 ரன்னும், வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்டிங் 51 ரன்னும் எடுக்க ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் குவித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அதிகபட்சமாக வெலுக்வாயோ 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது.

201609302049544617_1st-ODI-Australia-295-runs-targets-set-to-South-Africa_SECVPF

Related posts: