நெல்லுக்கு மட்டுமன்றி ஏனைய பயிர்ச் செய்கைக்கும் உர மானியம் – கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!
Friday, May 15th, 2026
……
கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆளுகையிலுள்ள குளங்களில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குக் கையளிக்கக் கூடிய குளங்களை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அடையாளப்படுத்தி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் தமக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க
அவ்வாறு தரவுகள் கிடைக்குமாயின் அக்குளங்களை கையளிக்கத் தாம் தயார் எனவும் உறுதியளித்தார்.
கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க (15) இன்று யாழ் வருகை தந்திருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கின் விவசாயம் சார் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
இதனோது குறித்த குளங்களின் ஆழுகை குறித்த பிரச்சினை முன்வைக்கப்பட்டு ஆரயப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
நெல் பயிர் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுவதைப் போன்று ஏனைய பயிர்களுக்குமான விவசாயத் தரவுகளைத் திரட்டும் புதிய அணுகுமுறைக்கு பூரண ஆதர வழங்கப்படும் ல்.
மேலும் நெல்லுக்கு மாத்திரமன்றி மாற்றுப் பயிர்ச்செய்கைகளுக்கும் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் அரச மானியத்துடன் உரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு மாகாணத்துக்கே உரித்தான விசேட பணப்பயிர்களையும் இலவசப் பயிர் காப்புறுதித் திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் விவசாய வீதிகளை அமைப்பது தொடர்பில் தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.
இதேவேளை விவசாய அமைப்புக்களை அனைத்துச் செயற்பாடுகளிலும் உள்வாங்குதல் மற்றும் யாழ்ப்பாணத்தில் வடிகாலமைப்புகளைச் சீரமைக்கும் திட்டம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
குறிப்பாக வடக்கின் ஒவ்வோர் மாவட்ட மட்டத்திலான பிரச்சினைகளும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
‘டித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் மண் நிரவுகை செய்வதற்கான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என மன்னார் மாவட்டச் செயலாளரின் கோரிக்கைக்கும் ஆணையாளர் பதிலளித்தார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உழவியந்திரங்கள் தொடர்பான சிக்கல்களுக்கும், முல்லைத்தீவில் வனவளத் திணைக்களத்தின் பிடியிலுள்ள வயல் நிலங்கள் குறித்தும் துரித கவனம் செலுத்த இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


