நெடுந்தீவு – குறிகாட்டுவான் அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!
Sunday, June 21st, 2026நெடுந்தீவுக்கான அரச கடற் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (22/06) தொடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒவ்வொரு திங்களும் நெடுந்தீவில் இருந்து காலை 6.15 மணி , காலை 6.45 மணி ஆகிய நேரங்களில் குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 7.30 மணி,
காலை 8.30 மணி ஆகிய நேரங்களில் நெடுநதீவை நோக்கிச் செல்ல ஏற்பாடாகியுள்ளதுடன் மாலைநேர சேவையில் தேவையேற்படின் மேலதிக அரச படகுகளை சேவையில் ஈடுபடுத்தவும் ஏற்பாடாகியுள்ளது.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள வடதாரகை , நெடுந்தாரகை என்பன திருத்தவேலைகள் முடிந்து தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
000
Related posts:
முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் - ஐயாத்...
இந்து சமுத்திர வலய பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அனைத்து தரப்பினரும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் - ஐக்கிய மக்கள் முன்னணியின் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடும் தென்னிலங்...
|
|
|


