நாட்டில் 35 மலேரியா நோயாளர் அடையாளம் -தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு!
Sunday, October 19th, 2025
………
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடத்திலேயே மலேரியா நோய் அடையாளம் காணப்படுவதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
071 284 1767 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைப்பதன் மூலம் மலேரியா தொடர்பான தகவல்களைப் பெற முடியும் என்று விசேட வைத்திய நிபுணர் இந்தீவரி குணரத்ன தெரிவித்துள்ளார்
Related posts:
பொலிஸாருக்கு நவீன ஊடகப் பரிணாமம் பெரும் சவால்- அமைச்சர் சாகல ரத்நாயக்க!
மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!
வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மோசடி - நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்...
|
|
|


