வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் மோசடி – நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

Wednesday, December 28th, 2022

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக நிறுவன மட்டத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிற நிலையில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ.ஜனக இதனைத் தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்திருந்தார்.

இது தொடர்பான அறிக்கையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் வழங்கியதையடுத்து, அவரின் பணிப்புரைக்கு அமைய விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: