நாட்டில் எலி காய்ச்சல் அபாயம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Tuesday, April 21st, 2026

நாட்டில் எலி காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலங்களில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுகளின் போது இவ்வாறு எலி காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

அந்த வகையில் பெரும்பாலான புத்தாண்டு நிகழ்வுகள் நீர் நிலைகள், சிறிய குளங்கள் மற்றும் வயல்வெளிகளுக்கு அருகில் ஏற்பாடு செய்யப்படுவதால் இந்த அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பகுதிகளில் விளையாட்டுகளில் ஈடுபடுவது எலி காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, நோய் பரவும் வாய்ப்பை அதிகப்படுத்துவதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் கடும் காய்ச்சல் மற்றும் தசை வலி ஆகிய அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், தாமதிக்காமல் உடனடியாக வைத்தியரை நாடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

000

Related posts: