நாடு தழுவிய ரீதியில் குழந்தை மானியம் – சீனா அரசு அதிரடி நடவடிக்கை!

சீனா முதல் முறையாக நாடு தழுவிய குழந்தை மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் பெற்றோருக்கு தலா 3,600 யுவான் (1500 அமெரிக்க டொலர்) மானியமாக வழங்கவுள்ளதாக சீன அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
நாட்டின் வீழ்ச்சி்யடையும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 2 கோடி குடும்பங்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், பெற்றோர்கள் ஒரு குழந்தைக்கு 10,800 யுவான் வரை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு தசாப்தத்துக்கு முன்னதாக சீனா அதன் “ஒரு குழந்தை” கொள்கையை முடிவுக்குக் கொண்டுவந்த போதிலும், சீனா தொடர்ந்து சனத்தொகை பிரச்சினையை எதிர்கொள்கிறது.
2024 ஆம் ஆண்டு, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சனத்தொகை சரிந்ததுடன் 9.54 மில்லியன் பிறப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
சில உள்ளூர் மாகாண அரசாங்கங்களும் சீனாவில் மூன்றாவது குழந்தைகளுக்கு மானியங்களை வழங்குகின்றன.
சீனாவில் ஒரு குழந்தையை வளர்ப்பது ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக செலவு ஏற்படுவதாக சீனாவின் சனத்தொகை ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
அதன்படி, 17 வயது வரை பிள்ளை வளர்ப்புக்காக சராசரியாக 75,700 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|