நல்லை ஆதீன குரு முதல்வருக்கு திருவுருவச்சிலை திறந்து வைப்பு – ஆதீனத்தின் வளர்சிக்கு கிடைத்த டக்ளஸின் ஒத்துழைப்பையும் மீள் நினைவூட்டி சுட்டிக்காட்டிய ஆறுதிருமுருகன்!
Thursday, April 23rd, 2026
நல்லை ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நி தானம் ஸ்ரீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசர்ய சுவாமிகளின் திருவுரு வச்சிலை நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா நல்லை ஆதினத்திற்கு செய்திருந்த சேவைகளும் நல்லை ஆதீன அறக்கட்டளையின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகனால் நினைவுபடுத்தப்படடிருந்தது.
முன்பதாக நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வளாகத்தில் குறித்த சிலை அமைக்கப்பட்டு நேற்றையதின் (22) திறந்து வைக்கப்பட்டது.
நல்லை ஆதீன குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
நல்லை ஆதீன அறக்கட்டளையின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிலையை கம்பவாரிதி ஜெயராஜ் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பண்டிதர் சிவஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்கள், தவத்திரு வேலன் சுவாமிகள், ஸ்ரீ தொண்டுநாதன் சுவாமிகள், நாகவிகாரை விகாரதிபதி, உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள் ஆதீனத்தினதும் ஸ்ரீலசிறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசர்ய சுவாமிகளினதும் கடந்தகால வேவைகளை மீள நினைவுகூரியிருந்தனர்.
இதன்போது நல்லை ஆதீன அறக்கட்டளையின் செயலாளர் கலாநிதி ஆறு திருமுருகன் தனது உரையில் ஆதீனம் கடந்த காலத்தில் எதிர்கொண்ட அசௌகரிங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்ததுடன் அந்த நிலையில் இருந்து ஆதீனம்; எவ்வாறு மீண்டுவந்தது என்றும் பதிவிட்டிருந்தார்.
குறிப்பாக 2000 ஆண்டளவில் குறித்த ஆதீனம் பாரிய இடர்பாடுகளுடன் இருந்ததாகவும் குருமுதல்வர் தங்குவதற்கான இல்லம் கூட பாரியளவில் சேதமுற்று மழை நீர் முழுவதும் வீட்டுக்குள் செல்லும் அளவு கூரை சிதைந்திருந்ததாகவும் என சுட்டிக்காட்டியிருந்ததுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வைத் தர எவரும் முன்வராதிருந்த போது அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் நல்லை ஆதீனம் கட்டட புனரமைப்புக்கு நிதி தருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
தமது ஆதீனத்தின் நிலையை கருத்தில் கொண்ட டக்ளஸ் தேவானந்தர் குறித்த கட்டடத்தை முழுமையாக கட்டுவதற்கான நிதியை வழங்கியிருந்தார் என்றும் அவர் வழங்கிய நிதியின் ஊடகவே குறித்த கட்டடம் முழுமையாக கட்டப்பட்டது என்றும் நினைவு கூரியிருந்தார்.
டக்ளஸ் தேவானந்தாவின் இந்த சேவையின் பின்னர் இன்னும் பலரிடம் நிதி பெறப்பட்டு மேலும் பல கட்டடங்கள் கட்டப்பட்டது என்றும் அதன் தொடர்ச்சியாகவே இன்று இந்த ஆதீனம் இவ்வாறு பரிணமித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


