நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை முதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமானது.
இந்தநிலையில், கொடியேற்றத்துக்காக சம்பிரதாயப் பூர்வமாகக் கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதேவேளை, நேற்றைய தினம், செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும், கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி நாட்டப்பட்டது.
இன்று ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு நேற்றையதினம் வைரவர் உற்சவம் நடைபெற்றது.
இன்றிலிருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவம் இடம்பெற்று சப்பரம், தேர், தீர்த்தம் என்று நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நிறைவுபெறும்
000
Related posts:
|
|