இன்னும் சிலதினங்களுக்கு கனமழை தொடரும் – யாழ். வானிலை ஆய்வாளர் பிரதீபன்

Monday, May 16th, 2016

இலங்கையின் தென்கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்னும் ஒரு சில தினங்களுக்கு காற்றுடன்கூடிய மழை நீடிக்குமென என யாழ்.வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இலங்கையின் தென்கிழக்குக் கடலில் நிலைகொண்டுள்ள தாழமுக்கமானது மேலும் கிழக்கு நோக்கி நகர்வதால் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்றும் இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் 40 கிலோமீற்றர் தொடக்கம் 50 கிலோமீற்றர் வேகத்தில் காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் காலியூடாக அம்பாந்தோட்டை  வரையிலான கடற்பகுதிகளில் காற்று வீசு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர் காற்றின் வேகம் திடீரென 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இடியுடன் முகில்கள் காணப்படும் வேளையில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 90 கிலோமீற்றர் வரை திடீரென அதிகரிக்கக்கூடுமெனவும்  அவர் குறிப்பிட்டார்.

இடியுடன்கூடிய மழையிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மீனவர்கள், மக்கள் ஆகியோர் அவதானமாக இருக்கும்படி யாழ்.வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பாதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

5b390993-f542-4014-85a7-c429a33b8a1c

Related posts: